Advertisment

“இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான்” - விஜய் பேச்சு!

tvk-vijay-side-speech

புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டை ஒதுக்குவது மாதிரி புதுச்சேரியும் ஒதுக்கக் கூடாது என்று நாங்கள் (த.வெ.க.) கேட்டுக் கொள்கிறோம். சுமார் 20 லட்சம் பேர் வாழும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதிக் குழுவில் இடம் பெறவில்லை. 

Advertisment

அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்குத் தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுவதால் மீத தேவைக்கு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்களைக் கொண்டு கடன் வாங்குகிறது புதுச்சேரி.

Advertisment

இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் ஒரே வழி மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும். இது புதுச்சேரி மக்களின் பல்லாண்டு கால கோரிக்கை. புதுச்சேரிக்கு போதுமான நிதி வரத்து இல்லாததின் காரணத்தால்  வெளியே கடன் வாங்க வேண்டியதாய் இருக்கிறது.  புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது இல்லையா. தொழில் வளர்ச்சியும் தேவை. எனவே புதுச்சேரி தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற (தொழில் இடமாக) எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும். 

py-tvk-vijay-mic

இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருப்பது மாதிரி இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை எண்ணெய் என்று அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். கடைசியாக மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளையும் பரிமுதல் செய்து விடுகிறது. 

அதனால் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நான் மறுபடியும் சொல்கிறேன். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காகவும் எப்பவும் துணை நிற்பான். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்” எனப் பேசினார். 

Puducherry ration shop ration shops Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe