சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (13.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு, செல்பே எடுக்காத ஒரு பழைய அரித்மெட்டிக் கணக்கு இதெல்லாம் வேலைக்கே ஆகாது. ஆணித்தரமா அடித்துச் சொல்கிறேன்.இந்த காசு கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்றுகனவு காண்பது எதுவும் இந்த விஜய் வந்ததற்கு அப்புறம் நடக்கவே நடக்காது.
வண்டி வண்டியாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள் 1000, 2000, 3000, 4000, 5000 என்று சாமி மேல் சத்தியம் எல்லாம் வாங்குவார்கள். அப்படிதான் இத்தனை வருடமாக உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். சந்தோஷமா வாங்கிக்கோங்க. எல்லாம் உங்கள் பணம்தான். வாங்கிக்கிட்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள். அவர்கள் செவிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள். ஜென்சி என்ற அடுத்த இளம் தலைமுறையினருக்கும் நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பணத்தைக் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்குகிற கலாச்சாரம் ஒழிய வேண்டும். பணத்தைக் கொடுத்து ஏமாற்றினால் ஏமாறுவீர்களா?” எனக் கேட்டு அங்கிருந்தவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார்.
அதில், “எங்க ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான். வேற யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், “கேட்டுச்சா சார். நீங்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கிற பணம் எல்லாம் இனிமே வேஸ்ட்டாக போகப்போகிறது. குப்பையில் தான் தூக்கிப் போட வேண்டும். உங்களுடைய இந்த ஊழல் ஆட்சியையும் மக்கள் குப்பையில் தான் தூக்கிப் போடப் போகிறார்கள்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/slm-tvk-vijay-speech-2-2026-02-13-14-40-50.jpg)