புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “நீங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளைப் பற்றி இன்றைக்கு நான் பேசுவதற்காக வந்திருக்கிறேன். அதுமட்டுமில்லை இந்த புதுச்சேரி அரசைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இது உறுதியாகத் தமிழ்நாட்டில் இருக்கிற மாதிரி (நம்ம) திமுக அரசு மாதிரி கிடையவே கிடையாது. ஏனென்றால் வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகவே இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியா வரும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து பாரபட்சமே காட்டாமல் இந்த அரசு நடத்திக் கொண்டு  இருக்கிறார்கள்.

Advertisment

அப்படிப்பட்ட இந்த புதுச்சேரி அரசுக்கும், நம்ம புதுச்சேரி சி.எம். சார் (ரங்கசாமி) அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கிற திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் (திமுக) கற்றுக்கொள்ள மாட்டார்கள். பரவாயில்லை வரும்  தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள் அதை  மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” எனப் பேசினார்.