தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (05.11.2025) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “கரூர் சம்பவத்தில், 50 வருஷமா பொது வாழ்க்கையில் இருக்கிற ஒரு முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய ஒரு வடிகட்டின பொய், சப்பை கட்டுன்னு நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறார்கள். அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது என்பது பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் தலையின் ஓங்கி நருக்கு, நருக்கு, நருக்கு என்று கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார் அல்லவா? அந்த உத்தரவை ஏதோ சட்டத்தின் மீதும், நீதி பரிபாலனத்தின் மீதும் மரியாதை கொண்டவர்கள் போல ஒரு நாடகத்தனமான கொண்டாட்டத்தை திமுகவும், திமுகவிற்கு ஒத்து ஊதுவோரும் நடத்தி கூத்தாடி குதூகலித்தனர் அல்லவா? தவெகவிற்கு எதிராகவும், நமக்கு எதிராகவும் உயிர் நீதிமன்றம் நீதியரசர் தீர்ப்பளித்துவிட்டதாக விதந்தோதி விழா எடுத்தனர் அல்லவா?. அந்த உத்தரவை குறித்து சொல்லும்போது எந்த ஆவணத்தை அடிப்படையில் அந்த உத்தரவு அமைக்கப்பட்டது நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் உரத்த குரலில் கேள்வி கேட்டது. அப்போதும் கூட உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே பார்த்தது அல்லவா? இதையும் முதல்வர் மறந்துவிட்டாரா?. பொது வழிகாட்டு முறைகளான எஸ்.ஓ.பி அமைக்கப்பட்டு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த ரிட் மனுவை நீதிபதிகள் டிவிஷன் பென்ச் தான் கையாள வேண்டும் , தனி நீதிபதி பெஞ்ச் கையாள கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் சொன்னது அல்லவா?. அது மட்டுமா கோரிக்கையே இல்லாமல் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது எந்த வகையில் சரி என்றும் கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம் . இது எல்லாமே அறியாமலோ இல்லை அறியாதது போலவோ உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து பேசினாரோ முதல்வர்?. மனிதாபிமானம் , அரசியல் அறம், மாண்பு, இதெல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே பேசி அரசியல் ஆதாயம் தேடுகிற ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டார் முதல்வர்.
இதெல்லாம் அவங்களுக்கு புதுசா என்ன?. 1969க்கு அப்புறம், எப்போது கட்சி அவர்கள் கைக்கு வந்ததோ இன்னும் குறிப்பா சொல்லணும்னா 1972க்கு அப்புறம் . கேள்வி கேட்க ஆளே இல்லாம போச்சு, அதுக்கு அப்புறமே இந்த திமுக தலைமை இப்படிதானே இருக்கிறது. இப்போது நாங்கள் கேட்டோமே இந்த சில கேள்விகள் , இதெல்லாம் நான் கேட்கவில்லை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. இந்த அரசு நடத்துகிற விசாரணை மேல் சந்தேகம் ஏற்படுகிறது என்றால் என்ன அர்த்தம்? உங்கள் மேல் நம்பிக்கை இல்லையென அர்த்தம். இதெல்லாம் ஏன் எதற்காக என்று முதல்வருக்கு புரிகிறதா?. உச்ச நீதிமன்றம் சொன்னதோட மட்டுமல்லாமல், நிஜத்திலும் இன்றைக்கு மக்களுக்கு இந்த அரசு மீது இருக்கிற நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதுவாவது முதல்வருக்கு புரிகிறதா? புரியலனா 2026 தேர்தலில், இந்த திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமா அழுத்தமா புரிய வைப்பாங்க. அப்ப கூட இவங்க என்ன பண்ணுவாங்க தெரியும்ல , அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை பழக்க தோஷத்தில ஒரு அறிக்கை ஒன்னு வெளியிடுவாங்களே மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்திற்குள் போய் ஓடி ஒழிஞ்சுப்பாங்க.
இப்பவே ரெடி பண்ணி வச்சுக்கோங்க அந்த அறிக்கையை. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கிறோம் என்று ரெடி பண்ணி வச்சுக்கோங்க. நான் போன பொதுக்குழுவில் சொன்னதான் நான் திரும்பவும் சொல்றேன் . இயற்கையும், இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியா நம்ம கூடவே நிக்கும்போது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் எவர் ?. அதனால தோழர்களே நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் தற்காலிகம் மட்டும்தான். எல்லாத்தையும் தகர்த்தெறிவோம் மக்களோட கை கோர்த்து நிற்போம், மக்களோட களத்தில் போய் நிற்போம். நம்ம பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன் 2026ல் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. இந்த போட்டி இன்னும் வலிமையா மாறப்போகுது. 100 சதவீதம் வெற்றி நமக்கே. வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/tvkv-2025-11-05-18-09-47.jpg)