Advertisment

“விஜய் எல்லோரையும் நேசிக்கிறார்” - செங்கோட்டையன் பேட்டி!

ed-sengottaiyan-speech

ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்  ஈரோடு மாநகராட்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ . செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “1987ஆம் ஆண்டு இதே மண்டபத்தில் ஜெயலலிதா கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் ராணுவ கட்டுபாடுடன் இருக்கிறது. இந்த கூட்டம் அமைதியாக இருக்கிறது என்று சொன்னால் விஜய் கோட்டையில் அமர்த்தும் கூட்டமாக இருக்கிறது. நான் வந்து 5 மாதங்கள் ஆகிறது. நான் முதல் முறையாக எனது பயணத்தை தந்தை பெரியார் மண்ணில் பேரறிஞர் அண்ணா வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் பயணம் மேற்கொண்டேன்.

Advertisment

1977ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். 26 வயதில் சட்டமன்ற உறுப்பினர், தொடர்ந்து ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர். எம்ஜிஆர் ஜெயலலிதா உடன் பயணம் செய்தேன். ஆனால் இன்று புரட்சி தளபதி விஜய் உடன் பயணம் மேற்கொண்டு வருவது மூலம் மூன்று தலைமுறையுடன் பயணம் செய்து கொண்டு இருக்கின்றேன். எந்த பாதையில் சென்றால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்து இயக்கத்தில் சேர்ந்தேன். அ.தி.மு.க.வில் இருந்து என்னை தூக்கி எறிந்தார்கள். தூக்கி எறிந்த உடன்  தாங்கி பிடித்தவர் விஜய் தான். 50 ஆண்டுகள் வரலாற்றுக்கு பிறகு ஒரே நொடி பொழுதில் அ.தி.மு.க.வில் இருந்து தூக்கி எரியப்பட்டேன். ஆனால் இன்று என் பின்னால் தமிழக வெற்றி கழகம் நின்று கொண்டிருக்கிறது. 

Advertisment

இதன் மூலம் எனது வயது 20 வயது குறைந்திருக்கிறது. நல்லவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நான் இருக்கிறேன.என்னை விஜய் இதயத்தில் வைத்து இடம் கொடுத்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் படத்தை வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது விஜய் சொன்னார் ஜெயலலிதா படத்தை வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் மகிழ்ச்சி என்றார். ஒரு தலைவன் தன் படத்தை வைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் காலத்தில் மற்ற தலைவர் படத்தை வைத்து கொள்ளுங்கள் தலைவரை இன்று தான் பார்க்கிறேன். விஜய் எல்லோரையும் நேசிக்கிறார். எல்லோரிடத்திலும் அன்பு காட்டுகிறார். சாதி சமய பேதமற்ற உருவாக்க விஜய் துடிக்கிறார். தமிழ் சமுதாயம் ஒரு காலத்தில் கேட்பாற்று அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்ட காலத்தில் நசுக்கப்பட்ட நேரத்தில் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பியவர் பெரியார். நாளை தமிழகத்தில் வெற்றி காண போகக்கூடிய விஜய் தான் நிரந்தர தமிழ்நாட்டின் முதலமைச்சர். 

tvk-kas
கோப்புப்படம்

தி.மு.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிக்கு சக்தி இல்லை. ஏனென்றால் 10 முறை தோற்றுள்ளார்கள். இதனால் அ.தி.மு.க.வால் எழுந்து நிற்க முடியாது. எழுந்து நின்று அ.தி.மு.க.வால் போராட முடியாது. திமுக வீழ்த்த முடியாது. இதன் மூலம் தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது. திரையில் உச்சகட்டத்தில் இருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்க விஜய் வந்து இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் ரத்தத்தை சிந்தித்து வெற்றி உறுதியாக பெற்று தருவேன்.நாளை தேசிய கொடி ஏற்றுவார் விஜய் என்கிற வரலாற்றை படைக்க போகிறோம். 14 முறை ஜெயலலிதா உடன் சுற்று பயணம் நடத்தி இருக்கிறேன். அ.தி.மு.க ,தி.மு.க.வை வீழ்த்த முடியாது. தி.மு.க.வை  வீழ்த்தும் சக்தி விஜய்க்கு உள்ளது. 

ஒற்றுமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.களம் இன்னும் 60 நாட்கள் தான். இந்த 60 நாட்களில் நமது பணிகள் எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். இனி தமிழகத்தை பார்த்து தான் இந்தியாவை ஆளப்போகிறது என்று வரலாற்றை உருவாக்க வேண்டும். விஜய் சொல்பவர்கள் தான் சட்டமன்றத் உறுப்பினர்கள். குறுகிய நேரத்திற்கான காலம் என்பதால் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றை படைக்கும் யுகத்தை மாற்றும் காலம் அனைத்து மக்களின் கண்ணீரை துடைக்கும் காலம் அதை விஜயால் மட்டுமே முடியும். அவர் தான் 2026இல் தேசிய கொடியை ஏற்றுவார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை மிக விரைவில் வரும்” என அவர் கூறினார்.தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

K. A. Sengottaiyan Erode tvk tvk vijay Tamilaga Vettri Kazhagam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe