தமிழக வெற்றிக்கழக மாநில நிர்வாகிகள் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (15.12.2025) ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பரப்பரை கூட்டம் குறித்து பேட்டியளித்தார். அதில், “த.வெ.க. நிகழ்ச்சி ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு அமைந்திட வேண்டும் என்ற முறையில் எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு என்னென்ன பணிகளை நாங்கள் (த.வெ.க.வினர்) செய்ய வேண்டுமோ அந்த பணிகளை மிக் சிறப்பாக செய்து முடிப்போம்.
குறிப்பாக இங்கு வருபவர்களுக்கு தேவைப்படுவது குடிநீர், பாதுகாப்பு அரண் ஆகும். கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கழிவறை, எல்லா இடத்திலும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனங்கள், 40 கேமராக்கள், டிஜிட்டல் பேனர் போன்றவற்றை வைத்து இதுவரையிலும் தமிழகத்தில் கண்டிராத அளவிற்கு மக்கள் வெள்ளத்தில் தலைவருக்கு சிறப்பான வரவேற்பை தருகின்ற வகையிலேதான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை பொறுத்தவரையிலும், இதுவே தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்ற நிலையில், நாங்கள் அத்தனை பேரும் அந்த பணிகளை, ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
ஆகவே இந்த பணிகள் மூலமாக பெரியார் பிறந்த மண்ணில் இந்த மண்ணிற்கே ஒரு பெருமை இருக்கிறது. இந்த மண்ணிலிருந்து பாண்டிச்சேரிக்கு பிறகு ஒரு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. எல்லோரையும் பாராட்டுகின்ற அளவிற்கு, எல்லோருடைய பாராட்டுதலும் பெறுகின்ற அளவிற்கு இந்த பொதுக் கூட்டம் அமையும். அந்த அளவிற்கு அமைவதற்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் அனைவரும் தர இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். கர்ப்பிணி, முதியோர், குழந்தைகள் ஆகியோர் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/sengottaiyan-pm-ed-2025-12-15-20-18-58.jpg)