Advertisment

“மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்திலே அமருகிற காலம் உருவாகும்” - செங்கோட்டையன் பேட்டி!

tvk-vijay-kas-pm

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். 

Advertisment

மேலும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகள், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் வருகை தந்து த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அக்கட்சியின் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 

Advertisment

இந்நிலையில் செங்கோட்டையன் இன்று (28.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “விரைவில் விஜய்யோடு கலந்து பேசி என்னென்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்துக் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இன்று மக்கள் இருக்கின்ற மனநிலை ஒரு புதிய இயக்கம் தமிழகத்திலே ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அது இன்றைக்கு மக்களால் நேசிக்கப்படுகிற எல்லோரும் புதியவராக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்றைக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். அவருடைய பணிகளை பொறுத்தவரையிலும் 2026 என்பது மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்திலே அமருகிற காலம் உருவாகும்” எனப் பேசினார்.

Assembly Election 2026 tvk vijay Tamilaga Vettri Kazhagam K. A. Sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe