கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

Advertisment

இந்த வழக்​கில் தவெக பொதுச் செய​லா​ளர் என். ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சிடிஆர்​.நிர்​மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் மதி​யழகன் மற்றும் மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி. ஜோஸ் தங்​கையா உள்​ளிட்ட காவல் அதி​காரி​கள் டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலைமையகத்​தில் கடந்தாண்டு டிசம்பர் 29-ம் தேதி ஆஜராகினர். அவர்​களிடம் 3 நாட்​கள் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

Advertisment

அதனை தொடர்ந்து, டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​தில் நாளை (12-01-26) விசாரணைக்கு ஆஜராகு​மாறு தவெக தலை​வர் விஜய்க்கு சம்​மன் அனுப்​பப்​பட்டிருந்தது. அதன்படி, நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ளார். நாளை காலை டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள் மாலை சென்னை திரும்பவுள்ளார்.

இந்த நிலையில், விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக சார்பில் டெல்லி காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அளித்த மனுவில், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்றும், நாளை இரவு டெல்லியில் விஜய் தங்கும் இடத்தில் பாதுகாப்பு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment