த.வெ.க. சார்பில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட பிரசாரக் குழு அமைக்கப்பட்டது. இதில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் 3வது இடத்தில் செங்கோட்டையன் பெயர் இடம் பெற்றதால் கட்சியிலும், செங்கோட்டையனிடமும் அதிருப்தியும், சலசலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (21.01.2026) சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலைத் தமிழக வெற்றி கழகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் விதமாகத் தொகுதி முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரச்சார கூட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பேசுகையில், “செங்கோட்டையனுக்கும், எனக்கும் ஏதோ சங்கடம் உள்ளது என்று நியூஸ் வெளியாக வேண்டும் என்று செய்தியைப் போடுகிறார்கள். செங்கோட்டையன் 50 வருடமாக 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு வந்துள்ளார். 

Advertisment

யார் அரசியல் பண்ணுவார்கள். யார் அரசியல் பண்ண மாட்டார்கள் எனப் பார்த்த உடனே சொல்லக்கூடிய திறமையானவர் தான் செங்கோட்டையன். எங்களுக்குள் ஏதோ ஒரு மனக் கசப்பு என்பது எல்லாம் எங்களுக்கு எதுவுமே கிடையாது. எங்களைப் பொறுத்தவரை விஜய் கீழ் அனைவரும் தொண்டர்கள்தான் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் சொன்னார் பாருங்கள் கல்யாணத்துக்குப் போனேன் செல்பி எடுத்தார்கள் என்று அதுதான் உண்மை. விஜய் கூட இருக்கிற வரைக்கும் தான் என் நிழல் கூட என் கூட வரும். அதுதான் இன்று நம்முடைய நிலைமை. 

sengottaiyan-vanakkam-our-img

செங்கோட்டையனுக்கும் எனக்கும் ஏதோ மனக்கசப்பு என்று செய்திகள் வந்தது அது முழுக்க முழுக்க தவறான செய்தி. நாங்கள் இங்கு எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் கிடையாது. எந்த ஒரு குடும்பத்திலும் சின்ன சின்ன சண்டைகள் இருக்கும் என்று சொல்லுவார்கள். எங்களுடைய விஜய் குடும்பத்தில் அந்த மாதிரி சின்ன சின்ன சண்டை கூட கிடையாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பேசினார். 

Advertisment