Advertisment

பிரம்ம முகூர்த்தத்தில் பந்தல்கால் நடும் நிகழ்வு; பயந்து பயந்து ஏற்பாடுகள் செய்யும் த.வெ.க-வினர்!

brahma

TVK members are making preparations with trepidation at vijay's vellore event

வேலூர் மாவட்டம் அகரம்சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பள்ளிகுப்பம் செல்லும் சாலையில் வரும் 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடப்பட்டு வரும் நிலையில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் யாகாம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து பந்தல் கால் நடப்பட்டது. த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வேலூர் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி ஆகிய தொகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisment

23-ஆம் தேதி அன்று நடைபெறும் விஜய் சந்திப்பு கூட்டம், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக நடைபெற சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டதாக மாவட்டச் செயலாளர் கூறினார். இதுவரை நடிகர் விஜய் நடத்திய கூட்டங்களில் 52 பேர் இறந்துள்ளனர். கடைசியாக சேலத்தில் நடந்த கூட்டத்திலும் ஒருவர் இறந்துப்போனார். அதற்காக எந்தவித இரங்கல் அறிக்கையும் தெரிவிக்காதவர்களாக விஜய்யும் அவரது கட்சியினர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படி உயிர் பலி வாங்குவதாக தவெக நிர்வாகிகள் பயந்து பயந்து கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். சரியான முறையில் கூட்டம் நடத்த தெரியாதவர்கள் கடவுள் மீது பாரத்தைப்போட்டு நிகழ்ச்சியை நடத்த துவங்கியுள்ளனர்.

Advertisment

கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த, ஒழுங்கப்படுத்த, தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டுமே தவிர விடியற்காலையில் பூஜைப்போட்டால் எல்லாம் சரியாகிவிடாது என கிண்டலடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

tvk tvk vijay Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe