சாத்தூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் சின்னப்பர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில், மத்திய மாவட்டச் செயலாளர் சின்னப்பர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, சில நிர்வாகிகள் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்து முற்றிய நிலையில், சில நிர்வாகிகள் கூச்சலிட்டதால் அங்கு மேலும் பதற்றம் உருவானது. இறுதியில், மத்திய மாவட்டச் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர், இதனால் சலசலப்பு ஏற்பட்டது.