Thaweka's Madurai conference date changed Photograph: (tvk)
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மதுரையில் நடைபெற இருக்கும் தவெக கட்சியின் இரண்டாம் மாநில மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரப்பட்டி என்னுமிடத்தில் கடந்த 16 ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாநாடு ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் 25 ஆம் தேதி மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மாநாட்டை 25 ஆம் தேதிக்கு முன்னர் நடத்திக் கொள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு காவல்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் 'தவெக கட்சியின் இரண்டாவது மாநாட்டின் தேதியானது மாற்றப்பட்டுள்ளதாகவும், போலீசார் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதிக்குள் மாநாட்டை நடத்திக் கொள்ள பரிந்துரைத்துள்ளனர். நாளை கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டிற்கான மாற்றுத் தேதியை அறிவிப்பார்' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.