Advertisment

“வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் என்ன திமுகவா, டிவிகே டா...” - ஈரோட்டில் விஜய் பேச்சு

tvkvijayerode

TVk leader Vijay's speech in Erode strongly criticized DMK

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18-12-25) நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “காஞ்சிபுரத்தில் நம்முடைய ஆட்சி வரும் போது என்னவெல்லாம் செய்வோம் என்று சொன்னேன். அதையெல்லாம் தப்பு தப்பாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். இப்போது சொல்கிறேன், நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்று சொல்கிறீர்கள். அப்படியே செஞ்சுட்டாலும் ஓசில போற ஓசில வர என அசிங்கப்படுத்திறீங்க. கேட்குறத்துக்கு ஆளு இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கிறீர்களா?. மக்களுக்கு ஒன்னுனா இந்த விஜய் வந்து நிற்பான், விஜய் கேள்வி கேட்பான். இந்த விஜய் எப்போதும் மக்கள் பக்கம் தான். அதே மாதிரி மக்களும் என் பக்கம் தான். என் மக்கள் மானத்தோடு மரியாதையோடு கெளரவத்தோடு வாழ வேண்டும். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது. அப்படி அவர்கள் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்றால் அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும். வாழ்க்கை தரம் உயர வேண்டுமென்றால் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர வேண்டும். வாழ்வாதாரம் உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் உயர்ந்தால் தான் வசதி வாய்ப்பு உயரும். இதையெல்லாம் உயர்ந்தாலே அவர்களுடைய வாழ்க்கை தரம், அவர்களுடைய மரியாதை, கெளரவம் உயரும். இதற்கான சூழ்நிலையை அரசாங்கம் அமைத்து கொடுக்க வேண்டும். நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால் தான் இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கம். இதை தான் அன்றைக்கு சொன்னோம். உடனே, சொன்னா மட்டும் போதுமா? எப்படி செயல்படுத்துவீங்க என்று கேட்கிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுடுவதற்கு டிஎம்கேவா, டிவிகே டா...

Advertisment

எல்லோருக்கும் நிரந்தரமான வீடு கட்டி தரப்படும் என்று சொன்னோம். உடனே எங்கள் ஆட்சியிலேயே எல்லோருக்கும் வீடு கட்டி கொடுத்துவிட்டோமே என்று சொல்கிறார்கள். இங்கு வாடகைக்கு இருக்கிறவர்கள் யாருமே இல்லையா?. எல்லோருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்துட்டாங்களா?. வீட்டில் இருக்கிற ஒவ்வொருவருத்தரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிக்க வைக்கப்படும் என்று சொன்னோம். உடனே எங்கள் ஆட்சியிலேயே எல்லோரும் டிகிரி படிச்சு முடிச்சுட்டாங்களே என்று சொல்கிறார்கள். அது உண்மை என்றால், பள்ளி லெவலிலேயே படிப்பு டிராப் அவுட் ஆனது யாருடைய ஆட்சியில்?. பசங்க யாரும் பள்ளியில் சேரவில்லை என்று 207 பள்ளிகளை மூடப்பட்டது யாருடைய ஆட்சியில்?. இதில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று டிராமா வேற.. குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம் வரனும், வேலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கொடுக்காத வருமானமா? நாங்கள் கொடுக்காத வேலைவாய்ப்புகளா? என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்துட்டு ஆட்சிக்கு வந்தீர்களே எத்தனை காலிப் பணியிடங்களை நிரப்புனீர்கள்?. குறைந்தபட்சம் 1 லட்சம் காலிப் பணியிடங்களையாவது நிரப்புனீர்களா?.

இதையெல்லாம் சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றியது யாருடைய ஆட்சியில்?. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தான் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?. நம்முடைய ஆட்சியில் சட்ட ஒழுங்கில் சமரசமே இருக்காது, தைரியமாக இருங்கள். இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால், எல்லாவற்றையும் தப்பு தப்பாக திரிச்சு பேசிட்டு அவதூறு பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு அவர்களை திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேனன். அவர்கள் இரண்டு பேர் சொன்னதை நானும் திருப்பி சொல்றேன், திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி டிவிகேவுக்கும், தீய சக்தி டிஎம்கேவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும். அண்ணன் செங்கோட்டையன், நம் கூட சேர்ந்தது நமக்கு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் மாதிரி நிறைய பேர் சேர இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்.

சமீபத்தில் ஒரு இடத்தில், என் கேரக்டரே புரிஞ்சிக்க மாட்டிகிறீங்க என்று சிஎம் சார் சொன்னார். இது சினிமா டயலாக் இல்லையாம். நான் பேசினால் அது சினிமா வசனமாம், சார் பேசினால் அது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததாம். உங்களை எப்படி தான் சார் புரிஞ்சுக்கிறது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்க கேரக்டரை நாங்கள் புரிஞ்சுக்கிறது, அதையும் நீங்களே சொல்லிடுங்க சார். சட்ட ஒழுங்கில் நாடே சந்தி சிரிக்குது, பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்குது, பொய் வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்கள், இதில் நாங்கள் உங்கள் கேரக்டரை புரிந்துகொள்வது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும் சரி, ஒன்றியத்தில் ஆட்சி செய்பவர்களும் சரி நீங்க இரண்டு பேரும் என்னோட கேரக்டரை புரிஞ்சுக்கணும் சார். என்னோட கேரக்டரை சொன்னது நம்முடைய மக்களுடைய கேரக்டரை. 2026 சட்டமன்றத் தேர்தலின் அந்த கேரக்டரே வேற மாதிரி சார்” என்று பேசினார். 

Erode tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe