தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள அகரம்சேரி கிராமத்தில்தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி,(பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூ.ஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
கியூ.ஆர் குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கியூ.ஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும். காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை. கியூ.ஆர். குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கட்சி நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாத கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, கியூ.ஆர் குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/slm-tvk-vijay-speech-2-2026-02-23-08-30-52.jpg)