அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் எனக் கூறப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (27-12-25) மலேசியாவில் பிரமாண்டமாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு தனிவிமானம் மூலம் சென்னைக்கு நேற்று (28-12-25) மாலை வரவுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால் சுமார் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் வரத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில், மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு விஜய் நேற்று மாலை வந்தார்.

Advertisment

அப்போது அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான் ரசிகர்கள், விஜய்யை நெருங்கி வந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர், ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதையடுத்து ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்ததால் அவர் நிலை தடுமாறி சற்று கீழே விழுந்தார். உடனே அவரை தாங்கி பிடித்து சிஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் போலீசார் அவரை காரில் உட்கார வைத்தனர். இதனையடுத்து அவர் உடனே காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.