தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் இன்று (02.02.2026) நடைபெற்றது. இதில் விஜய் பேசுகையில், “இப்படி எல்லாம் பேசுவதால் கண்டிப்பாக சில பேர் கொந்தளிப்பார்கள். அதற்கு நாம் கவலைப்படக்கூடாது ஏனென்றால் கொந்தளிக்கிறதுதான் அவர்களுக்கு வேலையே. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது, ஏன் அவர் தேர்தலில் ஜெயித்த பிறகும் கூட சட்டசபையில் ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறான் ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது புரட்சித் தலைவர் என்று ஒருத்தர் வந்துள்ளார் என இப்படி எல்லாம் கேலியும் கிண்டலும் செய்தார். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படிக் கொந்தளிக்கிறதுதான் அவர்களுடைய வேலையே. அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்ததற்கு அப்புறம் கூட இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது?.
எம்ஜிஆருக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது தெரியுமா?. 1952இல் இருந்து 1972 வரைக்கும் 20 வருடம் திமுகவில் அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?. விஜய்க்கு என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று கேட்ட அதே வாய் தான் அன்றைக்கு எம்ஜிஆரைப் பார்த்து, எம்ஜிஆர் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர். கவர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கிறவர். அட்டக்கத்தி. வாய் விளம்பர வள்ளல். இவருக்குக் கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும். பதில் சொல்லத் தெரியாது. நிருபர்களைச் சந்திக்க மாட்டார். டெல்லியைப் பகைத்துக்கொள்ள மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு பிரஷர் இருக்கிறது. அப்படி இப்படி என்று சொன்னதும் அதே வாய்தான். எம்ஜிஆரை மட்டும் இல்லை. அவருடைய தொண்டர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.
ஜொலி சொலிப்பைப் பார்த்தால் பல் இளிப்பவர்கள் என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். இதனை எல்லாம் மக்கள் அமைதியாகப் பார்த்துவிட்டு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கே நல்லா தெரியும்?. எம்.ஜி.ஆர் ஜெயித்த பிறகு இந்த அரசியலில் பழந்தின்றுவிட்டு கொட்டை போட்டவர்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா அவர்கள் எல்லாருக்குமே அந்த கோட்டை... கோட்டை... என்றது ஒரு பகல் கனவாகவே மாறிவிட்டது. காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு இலக்கியம் என்றால் என்ன தெரியும்?. அவர் மாபெரும் புலவர். அந்த புலவர் இந்த புலவர் என்று அவரைப் பற்றியும் கிண்டலும் கேளியும் செய்தார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/tvk-vijay-one-hand-1-2026-02-02-13-03-17.jpg)
யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் கொந்தளிக்கிறதுதான் அவர்களுடைய வேலையே. அவர்கள் செய்கின்ற ஊழலைப் பற்றி எடுத்துச் சொன்னால் 50 வருடத்திற்கு முன்னாள் இருக்கிற தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்?. பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக அவர்கள் செய்கிற தப்பை எல்லாம் வெளியே சொல்லாமல் இருக்க முடியுமா?. சொல்லுவோம். சொல்லிக்கொண்டே இருப்போம்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/tvk-vijay-speech-2026-02-02-13-02-34.jpg)