ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18-12-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “பெரியார் தன்னிடம் இருந்த செல்வாக்கையும், பதவியையும் அதிகாரத்தையும் வைத்துகொண்டு அவர் என்ன சொன்னார் தெரியுமா?. இவ்வளவு செல்வாக்கு, பதவி, அதிகாரத்தை இருந்தும் ஒரு 5 பைசா காசு சம்பாரிச்சு இருப்பேனா? எனக்கோ என் குடும்பத்தினருக்கு பட்டம் வேண்டும் பதவி வேண்டும் என்று கேட்டிருப்பேனா? லாபம் பாத்திருப்பேனா என்று கேட்டார். ஆனால் அவர் பெயரை சொல்லிட்டு அவருடைய கொள்கையை பின்பற்றுகிறோம் என்று சொல்லிட்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பெரியார் பேரை சொல்லிட்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள். பெரியார் பெயரை சொல்லிட்டு கொள்ளையடிக்கிற இவர்கள் தான் நமது அரசியல் எதிரி. அரசியல் எதிரி என்பதும் கொள்கை எதிரி யார் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே எனக்கு போதும். அதனால் அவர்களை மட்டுமே எதிர்ப்போம். அதுவும் யார் இங்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே எதிர்ப்போம். சும்மா களத்திலே இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை. நீங்கள் கேட்டுட்டு இருக்கிற காரணத்திலாயே எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.

Advertisment

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்வி கடனை தள்ளுபடி செய்வோம், கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் கொடுப்போம், என்னவெல்லாம் சொன்னார்கள். இதையெல்லாம் சொன்னார்களே செய்தார்களா?. சொல்றது ஒன்னு, செய்வது ஒன்னு. திமுகவும் பிரச்சனைகளும் பெவிகால் ஒட்டுன நண்பர்கள் மாதிரி. இதை பிரிக்கவே முடியாது. பெரியார் பெயரை மட்டுமே சொல்லிவிட்டு அவருடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ, இந்த மஞ்சள் நகரத்துக்கு ஒன்னும் செய்யவில்லை, மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்னும் செய்யவில்லை. ஒழுங்காக நேர்மையாக நியாயமாக மஞ்சளுக்கு விலை ஃபிக்ஸ் செய்து தரமான விதைகளை கொடுத்தால் அவர்கள் குறைந்தா போய்விடுவார்கள். இதையெல்லாம் யோசிப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. அதைவிட்டு இந்த விஜய்யை எப்படி முடக்கலாம், தவெக எப்படியெல்லாம் முடக்கலாம் என 24*7 அவர்கள் சிந்தனையாக உள்ளது. பவானி- நொய்யலாறு- அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. சொன்னார்களே செய்தார்களா?. ஆறுகளை சுத்தப்படுத்துவோம் என்று சொன்னார்களே செய்தார்களா?. ஆனால், ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் கரக்டாக செய்வார்கள்.

Advertisment

தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களுக்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறது. அதை தீர்ப்பதற்கு ஒரு தீர்வு கூட சொல்லாமல் மாடல் அரசு மாடல் அரசு என்று பெருமையாக சொல்கிறார்கள். உங்களுக்கு கூச்சமாக இல்லையா? இதையெல்லாம் கேட்டால் நம்ம பக்கம் யூ டர்ன் போட்டு திருப்பிவிடுவார்கள். விஜய் அரசியலே பேச மாட்டிக்கிறார், சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், பஞ்ச் டயலாக் பேசுகிறார், 10 நிமிஷம் தான் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்?. நான் எப்படி பேசினால் உங்களுக்கு என்ன சார்?. உள்ள இருக்கிற விஷயத்தை பாருங்கள் சார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். இது அரசியல் இல்லாமல் வேறு எது தான் அரசியல்?. உங்களை மாதிரி தனிப்படை முறையில் தரக்குறைவாக அசிங்க அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு நல்லாவே அது வரும், ஆனால் அது வேண்டாம் விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்” என்று பேசினார்.