Advertisment

“என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு” - த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு!

slm-tvk-vijay-speech

சேலம் மாவட்டம்  சீலநாயக்கன்பட்டியில்,  த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (13.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கரேஜ் தான் எல்லாத்துக்கும் ஒரு அடிப்படை. கரேஜ் தான் எல்லாத்துக்கும் ஒரு சக்தி. அப்படிப்பட்ட அந்த சக்தி எதில் இருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா?. நம்மைக் குறைத்து மதிப்பீடு செய்யும்போது ஆரம்பிக்கிறது. 

Advertisment

நம்மை ஏளனமாகப் பார்க்கும் போது ஆரம்பிக்கிறது. நாம் யார் என்று நிருப்பிக்க வேண்டும் என்றும் தோன்றும். நாம் யார் என்று காட்டவேண்டும் என்று உத்வேகம் உங்களுக்குள் வரும். அப்படி நிரூபிக்க வேண்டிய இடம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியுமா?. எந்த விஷயத்தில் நம்மைக் கேலியும், கிண்டலுமாகப் பேசுகிறார்களோ அதே விஷயத்தை வைத்து நேர்மறையாக வைத்து மாற்றுவது என்று ஒன்று இருக்கிறது அல்லவா?. அங்கிருந்து தான் சக்தி உருவாகிறது. 

Advertisment

அப்படிப்பட்ட உண்மையான சக்தியைச் சொல்கிறேன். அந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா?. ஏ.... விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. ஏ.... பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்கிறவர்களுக்கு என் வீடு எதுவென்று தெரியுமா?. முதலில் என் வீடு எங்கிருக்கிறது என்றாவது தெரியுமா?. என்னைச் சீண்டிப் பார்க்கிறதாக நினைத்துக் கிண்டலும், கேலியுமாகப் பேசுகிறவர்களுக்குச் சொல்கிறேன். இந்த தமிழ்நாடு... தமிழ்நாடு... என்று சொல்கிறார்களே... அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு” எனப் பேசினார். 

Tamilaga Vettri Kazhagam Assembly Election 2026 tvk vijay tvk Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe