தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில்  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (04.03.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் எல்லாரும் எனக்கு உறுதி மொழி ஒன்று கொடுக்க வேண்டும். ஊழலற்ற உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட த.வெ.க. ஆட்சியை அமைப்பீர்கள் தானே?. உங்களைத்தான் கேட்கிறேன். த.வெ.க. ஆட்சியை அமைப்பீர்கள் தானே?. இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே?. 

Advertisment

உண்மையிலேயே வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே?. இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே?. ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும் தானே?. அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் ஒலிக்கும் தானே?. ஒரு டாக்டர் இருக்கிறார் என்றால் நாம் எப்போது அவரை பற்றி யோசிப்போம். நமக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால் அவரை பற்றி  யோசிப்போம். அவர் ஞாபகம் வரும். அது மாதிரி நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்  ஒரு வக்கீலை தேடிப் போவோம். அவர் ஞாபகத்துக்கு வருவார். இது மனித இயல்பு. 

Advertisment

அந்தந்த பிரச்சனை வரும்போது நாம் அவர்கள்  தேடிப் போவோம். ஆனால் தினமும் சாப்பிடும் போது கூட நம்மை அறியாமல் ஒருத்தரைப் பற்றி நினைப்போம். நம்மை  அறியாமல் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லுவோம். அந்த மதிப்பிற்குரிய அந்த மனிதர்கள் வேறு யாரும் இல்லை. விவசாயி.... விவசாயி....  விவசாயி.... அவர்கள்  பார்ப்பதற்கு வேண்டுமானால்  சாதாரணமாக  இருப்பார்கள். ஆனால் அவர்கள் சாதாரணமான மனிதர்கள் எல்லாம் கிடையாது. இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது கடவுள் என்று சொல்வார்கள் ஆனால் அந்த  கடவுளுக்கே படையல் போடுற உயர்ந்த மனிதர்கள்தான் நம் விவசாயிகள். 

tj-tvk-vijay-green-team

இந்த பூமியில் உயிர் இருக்கிறது. இந்த பூமியில் பூ பூக்கும் காய் காய்க்கும் பூத்துக் குலுங்கும் என்று இந்த பூமியை அழகாகக் காட்டி இந்த பூமியை சாமி ஆக்குவதில்  இயற்கையோடு சேர்ந்து நம் விவசாயிகளுக்கும் ஒரு முக்கிய பங்கு ஒன்று இருக்கிறது. அதனால் நான் ஏதோ ஓவராக எதுவும் சொல்கிறேன் என்று  நினைக்காதீர்கள். எனக்கு அடுத்த ஜென்மம் மறுபிறவியைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. அது உண்மை என்றால் அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறேன். 

Advertisment

எனக்கு விவசாயத்தைப் பத்தி விரிவாக (டீடைல்டா) தெரியாதுதான். நான் ஒத்துக்கிறேன் அதனால் மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாாரன் தான் என்று உங்கள் காதில் டால்டா ஊத்த எல்லாம்  நான் வரவில்லை. எனக்கு விவசாயத்தைப் பத்தி டீடைல்டா தெரியவில்லை என்றாலும்  கூட அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்” எனப் பேசினார்.