தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.  

Advertisment

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இந்தியா அரசியல் சாசனத்தில், நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுத்திருக்கும் உரிமையில் ரொம்ப ரொம்ப முக்கியமானது வாக்கு உரிமை. ஒரு மனுஷன் உயிரோட இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பது அவனுடைய ஓட்டு உரிமை ரொம்ப முக்கியம். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி இப்ப நான் உங்களிடம் தான் பகிரப்போகிறேன். இதை நான் முதலில் கேள்விப்பட்டவுடன் எனக்கே ரொம்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இப்ப நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே, ஓட்டுப் போடும் உரிமையே இல்லை என்று சொன்னால் நம்புவீங்களா? நான், நீங்கள் உட்பட, யாருக்குமே அது இல்லை. நான் பயமுறுத்துறேன் என்று நினைக்காதீங்க, அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தால் நம்மை மாதிரியே இன்னும் லட்சக் கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டுப் போடும் உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ.ஆர் (SIR) Special Intensive Revision, சிறப்பு தீவிர திருத்தம்.

இந்த எஸ்.ஐ.ஆர் நம்முடைய தமிழ்நாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறது?. கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்புல் 6.36 கோடி வாக்காளர்கள் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே ஓட்டுப் போடும் உரிமையே இல்லை. பூத் லெவல் ஆபிஸர் (வாக்குச் சாவடி நிலை அலுவலர்) தான் வீடு வீடாக சென்று அந்த படிவத்தை கொடுப்பார்கள். அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தேர்த்தல் ஆணையம் அதை எடுத்துட்டு போய் அதை சரி செய்து வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நம்ம பெயர் இருக்கணும், அப்போது தான் நம்மால் ஓட்டுப் போட முடியும். அந்த புது பட்டியல் வருகிற வரைக்கும் நாம் வாக்காளர்களா என்பது அது உறுதியே செய்ய முடியாது. ஒருவேளை, அந்த புது பட்டியலில் நம்ம பெயர் இல்லையென்றால், தனி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அது வேறு வேலை. இந்த மாதிரி நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருப்பதால், மக்களுக்கு இதன் மேல் ஒரு குழப்பங்கள் இருக்கிறது. இது சரிபார்ப்பா அல்லது மறைமுக புதிய பதிவா இந்த மாதிரி நிறைய குழப்பங்கள் இருக்கிறது. இந்த மாதிரி வீடு வீடாக மறு கணக்கீடு படிவத்தை கொடுக்கும் போது அதற்கான ஒப்புதலை பிஎல்ஓ ஆபிஸரிடம் இருந்து நீங்கள் வாங்க வேண்டும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். இதை, வாக்காளர் (3:04) பட்டியலில் ஏற்கெனவே உங்கள் பெயர் இருக்குறவர்களுக்கு நான் சொல்றேன். புது வாக்காளர்களுக்கு பார்ம் 6 (FORM 6) என்று இருக்கிறது. அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இதை நேரடியாகவோ ஆன்லைனிலோ சமர்பிக்கலாம்.

Advertisment

இதையெல்லாம் சரியாக செய்தாலும் இந்த எஸ்.ஐ.ஆர் மேல் சில சந்தேகங்கள் இருக்கிறது. ஒரே மாதத்திற்குள் 6.36 கோடி வாக்காளர்களிடம் ஒருத்தர் விடாமல் எப்படி அந்த படிவம் சென்றடையும்?. இதனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் உழைக்கிற மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்கிற பெண்கள் தான். ஒரு நியாயமான எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நீக்க வேண்டும். இப்போது வாக்கு இருக்கிறவர்களுக்கு எதற்கு பதிவு என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள்?.

புதிதாக வரும் வாக்காளர்களையும், ஓட்டு இல்லாதவர்களையும் சேர்த்தால் பத்தாதா? கடந்த தேர்தல்களில் எல்லோருமே எப்படி ஓட்டு போட்டோம்? அதில் பதிவானர்கள் கூட புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றால் ஏன் இந்த குழப்பம்?. அதனால் தான் இந்த எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம். இப்போது புதிதாக  சில புகார்கள் வர ஆரம்பிக்குது. நம்முடைய தவெக தோழர்களுக்கு அந்த பார்ஃம் கிடைக்கவில்லை என்று வருகிறது. இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை. இப்போது இருக்கிற ஆட்சியாளர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்குக்கூடிய சில பேர், இதை சரியாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் மை டியர் விர்டுவல் வாரியர்ஸ் (virtual warriors) இதை வந்து சாதாரணமா எடுத்துக்காதீங்க. அந்த பார்ஃம் எல்லாருக்குமே போய் சென்றடைய வேண்டும். இதில் ரொம்ப உறுதியா இருங்கள். அதையும் மீறி உங்களுக்கு அந்த பார்ஃம் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். வரப்போகிற தேர்தலில் அந்த ஜென்சி வாக்காளர்கள்தான் மிக முக்கியமான படைகள்.

உங்களை தொந்தரவு செய்வதற்கு, உங்களுடைய பெயரை அங்கு சேர்க்காமல் இருப்பதற்கு என்னென்ன தில்லுமுல்லு வேலைகள் செய்ய முடியுமோ எல்லாமே அவர்கள் அதை செய்வார்கள். இது நமக்கு எல்லா திசையிலும் எல்லா பிரச்சினைகள் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். அது வாடிக்கையாக நடந்துகொண்டுதான் இருக்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது. அது மாதிரி ஓட்டு போடும் விஷயத்திலும் அவர்கள் உத்தமராக மாறவாக போகிறார்கள்?. சில சந்திப்புகளிலும் ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன் இரண்டே இரண்டு பேருக்கும் நடுவில் போட்டி என்று. அது மேடைக்கும் மேடை, அவர்கள் அதை பூரூவ் செய்து வருகிறார்கள். அதனால் தோழர்களே, வரப்போகிற தேர்தலில் நாம் யாரென்று காட்டவேண்டும், நம் பலம் என்னென்று காட்டவேண்டும். அதற்காக அந்த பலமான ஆயுதத்தை நாம் கையில் எடுக்கவேண்டும். அந்த ஆயுதம், ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால் தான் நாம், வெற்றியை நோக்கி பயனிக்க முடியும். தமிழ்நாடே அந்த வாக்குசாவடி முன்னாடி திரண்டு நிற்க வேண்டும். அதைப் பார்த்துட்டு, தமிழ்நாடு தமிழக வெற்றிகழகமா? இல்லை, தமிழக வெற்றிக் கழகம் தான் தமிழ்நாடா என்ற மாதிரி இருக்க வேண்டும். வீடு என்ற ஒன்று இருந்தால்தான் ஓடு மாத்த முடியும் என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி ஓட்டு என்ற ஒன்று இருந்தால்தான் இந்த நாட்டையே  காப்பாற்ற முடியும்.