Advertisment

த.வெ.க. தலைவர் விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு!

dl-cbi-vijay-car

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (12.01.2025) காலை டெல்லிக்குச் சென்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை 04.15 மணியளவில் நிறைவடைந்தது. இந்த விசாரணையின் போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், “பிரச்சார கூட்டத்திற்குத் தாமதமாக வந்தது. 

Advertisment

கட்சி தொண்டர்களின் பாதுகாப்பு, அவசரக் கால மேலாண்மைக்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் செய்யப்படவில்லையா?. அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்து விழுந்தபோது நீங்கள் ஏன் பேச்சை நிறுத்தவில்லை?” எனச் சரமாரியாகச் சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதோடு சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக சிபிஐ தரப்பில் இருந்து பதிலைப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிபிஐ விசாரணை முடிந்து மாலை 06.30 மணியளவில் அங்கிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றனர். 

Advertisment

டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காகப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக நாளையும் (13.01.2025) சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து, விஜய்யிடம் நாளை விசாரணை நடைபெறவில்லை என்றும், இதற்கான மறு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விசாரணைக்கு நடுவே சிறிது நேரம் விஜய்க்கு மதிய உணவு அருந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

karur stampede Delhi CBI investigation tvk vijay Tamilaga Vettri Kazhagam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe