Advertisment

ஜனவரி 26இல் த.வெ.க. தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை!

tvk-vijay-our-stalin-img-1

கோப்புப்படம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் தவெக தலைவர் விஜய், கடந்த 16ஆம் தேதி  தவெக தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

Advertisment

அதில், “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின் (எ) நியாஸ், கேத்ரின் பாண்டியன் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்கு த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இதனையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21.01.2026) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலைத் தமிழக வெற்றி கழகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் விதமாகத் தொகுதி முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரச்சார கூட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

tvk-vijay-our-stalin-img-2

இந்நிலையில் தவெக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி உள்ளிட்ட 6 சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஜனவரி 26ஆம் தேதி (குடியரசு தினத்தன்று) ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Assembly Election 2026 Tamilaga Vettri Kazhagam tvk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe