சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை இன்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் பேசியதாவது, “தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று ஸ்டாலின் சார் அடிக்கடி சொல்வார். ஸ்டாலின் சார் எது எதுக்கெல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று நான் கொஞ்சம் சொல்லட்டுமா? சட்ட ஒழுங்கில் அவுட் ஆஃப் கண்ட்ரோல், பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆஃப் கண்ட்ரோல், இளைஞர்கள் வேலைவாய்ப்புகளில் அவுட் ஆஃப் கண்ட்ரோல். மொத்தத்தில் அவருடைய ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். இந்த வருட தொடக்கத்தில் சட்டசபையில் பேசும்போது, மக்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதனால் நானும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொன்னார். மக்கள் சந்தோஷமாக இருப்பதை பார்ப்பதில் ஒரு சந்தோஷம் தான் சார். அதை யாரும் இல்லையென்று சொல்லவொல்லை. அப்படி மக்கள் உண்மையிலேயே மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் ஏன் சார், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என எல்லோரும் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் ஆட்சியில் தான் போராட்டம் நடத்தி அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் தீரவே தீராத பிரச்சனைகள் என்னவென்றால், இருக்கிற இடம் பிரச்சனை, பார்க்கிற வேலை பிரச்சனை, செய்கிற தொழில் பிரச்சனை, விலைவாசி பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை, பஸ் வசதி இல்லையென்று பிரச்சனை, ரோடு சரி இல்லையென்று பிரச்சனை, ஆஸ்பத்திரி சரியாக இல்லையென்ற பிரச்சனை என இப்படியெல்லாம் ஒரு அடிப்படை விஷயங்களே பிரச்சனைகளாக இருந்தால் ஆளுங்கட்சி என்று எதற்கு தான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி பொய் பொய்யாக அடிச்சு வீட்டீங்க. இப்போது ஆட்சியை விட்டு போகும்போது கூட பொய் பொய்யாக பேசுறீங்களே சார். மாற்றி மாற்றி பேசுவதில் நீங்கள் வேற லெவல் தான் சார். ஆட்சிக்கு வந்த அடுத்த வருடமே 2022இல் 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொன்னாங்க. போன வருடம் 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொன்னாங்க. இந்த வருடம் 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம், கிட்டத்தட்ட 80 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். முதலில் 70, அப்புறம் 90, அப்புறம் 80. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க அது 60, 50, 40, 30, 20 போய் நிக்கும் என்று நினைக்கிறேன். அதையும் அவரே அறிவிப்பார் என்னமோ எனக்கு தெரியவில்லை. முதல்வர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த புலவர் பெருமானே, கொஞ்சும் அதை திருத்தி சொல்கிறேன். புலவர் பெருமானே அது இன்னும் பொருத்தமாக இருக்கும். அவருடைய அண்டை புழுகு, ஆகாச புழுகு என்ன தெரியுமா? பெண்களுக்கு பாதுகாப்பு தமிழ்நாட்டில் எங்கு போனாலும் கொட்டி கிடக்குதாம். அது உண்மையாக இருந்தால் அண்ணா யுனிவர்சிட்டியில் அந்த பெண்ணுக்கு ஏன் சார் அப்படி ஒரு கொடுமை நடந்தது? கோவை கல்லூரி பெண்ணுக்கு ஏன் சார் அப்படி ஒரு கொடுமை நடந்துச்சு? பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேலான போக்சோ வழக்குகள் ஏன் சார் பதிவானது? போதைப் பொருள் கலாச்சாரம் கண்ட்ரோலே இல்லாமல் அது பாட்டுக்கு தாறுமாறாக எங்கேயோ போய்கிட்டு இருக்கு. வன்முறை எல்லாம் தலைவிரித்து ஆடுது.
சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமென்றால், முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபி வேண்டும் சார். எங்க சார் போனார் அவர்? சும்மா இந்த ஆக்டிங் ஆபிசரை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை நடத்துனீர்கள் என்றால் இப்படித்தான் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும். முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபியை போடுங்க சார். அப்புறம் சட்டம் ஒழுங்கு சரியாகுதா என்று பார்ப்போம். கேள்வியாக கேக்குறியே நீ வந்தால் என்ன செய்வே? அது தானே கேக்குறீங்க. மக்களுடைய அடிப்படை தேவைகளை தீர்ப்பதுதான் நம்முடைய முதல் வேலையே. அதை தீர்ப்பதற்கான ஒரு தீர்வை தேடி போவது தான் நம்முடைய முதல் அஜெண்டாவே இருக்கும். கொஞ்சம் வெயில் பண்ணுங்க. தேர்தல் அறிக்கை ரெடி ஆயிட்டு இருக்கு, தெளிவாக ஒரு தேர்தல் அறிக்கையா வரும். என்னை நம்புகிற உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். ஆட்சி வருவதற்காக நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத மாதிரி விஷயங்கள் எல்லாம் வாக்குறுதிகள் எல்லாம் நான் என்றைக்கும் கொடுக்கவே மாட்டேன். அதே மாதிரி ஆட்சிக்கு வந்ததற்கு அப்புறம் கூட அவர்கள் அது தரவில்லை, இவர்கள் இது தரவில்லை என்று பம்மிகிட்டு இல்லாமல் உங்களுக்காக எந்த எல்லைக்கும் போய் நான் போராடவும் தயாராக இருக்கிறேன். இவ்வளவு நாள் நான் மட்டும் தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது களமே சொல்கிறது, ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே, ஒன்னு தூய சக்தி டிவிகே, இன்னொன்னு தீயசக்தி டிஎம்கே.
விஜய் என்னப்பா இவரை மட்டும் தான் எதிர்க்கிறார், இவர்களை எதிர்க்கவே மாட்டிக்கிறார், அவர்களை பற்றி எதுவும் சொல்ல மாட்டிக்கிறார் என்று சொல்கிறார்கள். இது யாருக்கான தேர்தல், தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இப்போது இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்?யார் பொய் பொய்யாக வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது? மக்கள் விரோத ஆட்சியை நடத்துவது யார்? அப்போது இங்கு யாரை அகற்ற வேண்டும்? இந்த மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டுமென்றால் நாம் யாரை எதிர்க்க வேண்டும்? எதற்கு தேவையில்லாமல் பலமுறை மக்கள் ஆல்ரெடி டெலிட் பண்ணவர்களை எதிர்க்க வேண்டும்? நம்முடைய இலக்கு திமுக எனும் போது டார்க்னஸ் உள்ளே எதற்கு கல் எறிய வேண்டும்? மக்கள் விரும்புகிற விஜய் வேண்டுமா? இல்லை மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் சார் வேண்டுமா? அவ்வளவு தான் இந்த தேர்தலே. இதற்கு நடுவில் வேறு யாருமே கிடையாது. விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? அவ்வளவு தான். போன வாரம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டார்கள். ரொம்ப சிம்பிளாக இது டெக்னிக்கல் பால்ட் என்று சொல்லி அதை கடந்து போய்ட்டாங்க. இதனால் தேர்வு எழுத தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சல் ஆகிருப்பார்கள்? ஒரு எக்ஸாம்ஸ் ஒழுங்கா நடத்த தெரியவில்லை, இதில் உலக நாடுகளுடன் போட்டு போடுகிறார்களாம். எல்லோரும் தைரியமாக இருங்க, வரப்போவது உங்க ஆட்சி, நம்ம ஆட்சி. இந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்காமல் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம். இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மனதில் வைத்து வெளிப்படையான ஒரு தீர்வை காணுவோம்.
விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒரு பொலிட்டிக்கல் பாம் ஒன்று போட்டேன். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னேன். இப்போது அந்த பொலிட்டிக்கல் பாம் எல்லா கூட்டணியிலும் வெடிச்சுக்கிட்டு இருக்கு. தாறுமாறாக வெடிச்சுகிட்டு இருக்கு. ஸ்டாலின் சார் பதறுகிறார், ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது என்று சொல்கிறார். அவர்களை பொறுத்தவரைக்கும் ஜெயிக்கிறதுக்காக மட்டும் தான் கூட்டணி, மற்ற எல்லாத்துக்குமே அவர்கள் தனி அணி, அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக ஆனால், வரும் வெல்த் எல்லோம் பார்ப்போம் தனியாக. இதை புரியவேண்டியவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/vijaysal-2026-02-13-17-26-42.jpg)