அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி(27.11.2025) இணைத்துக் கொண்டார். இதனையடுத்து அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எனவே இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு இன்று (07.12.2025) அளித்திருந்தார்.
அந்த மனுவில் ஈரோட்டில் உள்ள பவளத்தாம்பாளையம் அருகே விஜய் பரப்புரை செய்ய உள்ளதாக த.வெ.க.வினர் குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை செய்ய அனுமதி கோரிய இடத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது த.வெ.க.வினர் மனுவில் குறிப்பிட்டபடி, 75 ஆயிரம் பேரைக் கொண்டு பிரச்சாரம் நடத்துவதற்கான தகுந்த இடம் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/07/tvk-vijay-kas-smile-campaign-2025-12-07-14-38-50.jpg)