கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தில், 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான சம்பவ எதிரொலியாக, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் வெளியான ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின் போது ஹைதராபாத் தியேட்டர் ஒன்றில் அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், நடிகர் அல்லுர் அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதே போல், விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக, விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘இதுபோன்ற கட்டுப்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே?. பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும், சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாவதால் இதுபோன்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அக்கட்சியின் தலைவராக இருப்பவர் ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடாது? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும். மற்றவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருந்து காட்ட வேண்டும். இதேபோன்று மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒரு பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். விதிமுறைகளின் படி பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.