கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28வது அருமனை கிறிஸ்துமஸ் விழா இன்று (23.12.2025)  நடைபெற்றது. முன்னதாக இதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

அதே சமயம் இந்த கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். மற்றொருபுறம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. எனவே த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்ற கிறிஸ்மஸ் விழாவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.