ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தலைமையில் இன்று (14-12-25) தவெக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுகவில் இருந்து வெளியேறிய தொண்டர்கள் பலர், தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு செங்கோட்டையன் கட்சி துண்டை அணிவித்து தவெக கட்சிக்கு வரவேற்றார்.

Advertisment

இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், “மக்கள் சக்தியாக, எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கு தவெகவின் தலைவர், வருகிற 18ஆம் தேதி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவரது உரையை பொறுத்தவரையில் 18ஆம் தேதியன்று 11 மணியில் இருந்து 1 மணிக்குள் நடைபெற இருக்கிறது. விஜய்யை முழுமையாக ஏற்று அவருக்காக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி ஈரோடு பெருந்துறையில் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

Advertisment

தவெக விருப்ப மனு பெறுவது குறித்து தேதி அறிவிக்கப்படும். வருகிற 18ஆம் தேதி நிகழ்ச்சியை நடக்கும் நீங்கள் பாருங்கள். நாங்கள் செய்திருக்கிற பணிகளை பார்த்து நீங்களே பாராட்டுகின்ற வகையில் இருக்கும். தவெகவுக்கு யாரையும் போட்டி என்று சொல்ல முடியாது. தவெகவுக்கு மக்கள் சக்தி இருக்கிறது. தனிப்பட்ட முறையில் இவர்கள் தான் போட்டி என்று சொல்ல இயலாது. மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார்” என்று பேசினார்.