தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (22-12-25) கொண்டாடப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம், திமுகவை எதிர்க்கும் எல்லோரும் எங்களுடன் கூட்டணி தான் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களுடைய தலைவர் திமுகவை தீய சக்தி, எங்களை தூய சக்தி என்று சொன்னார். எங்களுடைய தலைவர் திமுகவை கடுமையாக எதிர்த்து பேசியதற்கு அதிமுகவை சேர்ந்த ஒரு சில பேர் அதற்கு பதில் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அரசியலில் அண்ட் கோ என்று சொல்வார்கள். இன்று பெரும்பாலான அதிமுக கட்சியுடைய மூத்த தலைவர்கள், அந்தந்த பகுதியுடைய திமுக அமைச்சர்களிடம் அண்ட் கோவாக இருக்கிறார்கள். கே.பி முனுசாமியின் பகுதியில் இருக்கிற திமுக அமைச்சர்களான காந்தியைப் பற்றியோ அல்ல துரைமுருகனைப் பற்றியோ அவர்கள் செய்த ஊழலைப் பற்றியோ ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா?
இதே மாதிரி தான் பெரும்பாலான அதிமுக தலைவர்கள், திமுக அமைச்சர்களிடம் அண்ட் கோவாக இருக்கிறார்கள். அவரவர் பகுதியில் இருக்கக்கூடியவர்கள், திமுகவிடம் செட்டிங்கோடு இருக்கிறார்கள். எங்களுடைய தலைவர் திமுகவை விமர்சித்தால் அதிமுக தலைவர்கள் பதில் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவர்கள் எல்லாம் திமுகவுடன் ஒரு அரசியல் பங்காளிகளாக இருக்கிறார்கள் என பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியும். இது இன்றைக்கு மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திமுக எதிர்ப்பை இவர்கள் எப்போது கைவிட்டார்களோ அன்றே மக்களுக்கு அவர்கள் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. திமுகவை பற்றி இவர்கள் ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க முயற்சியாவது செய்ய வேண்டும். ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு அதிமுக மாறி இருக்கிறது. அதனால் தான் அவர்கள் மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். கண்டிப்பாக திமுகவுக்கு மாற்றாக, திமுகவுக்கு ஒரே கடும் எதிர்க்கட்சியாக, எதிர்ப்பாக எங்களுடைய தலைவர் மட்டும் தான் இருப்பார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/ctr-2025-12-22-14-41-49.jpg)