கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. நேற்று திருநெல்வேலியில் நடந்த மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். அதே போல் பல்வேறு கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறுஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் த.வெ.க. சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், “மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us