தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டின் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சிகளும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
கூட்டணி குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் வைத்திருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய்யுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் முதல் முறையாக திமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். இது தவெகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தவிர அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும், விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அவர் திமுகவுடன் இணக்கம் காட்டி வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி சேருவார் என்று கூறப்படுகிறது. இதர கட்சிகளான தேமுதிகவும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுடன் கூட்டணி சேராமல் இருப்பது தவெகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் இன்று (20-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், “திமுக ஆட்ச் மோசமான ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னாடி இல்லாத அளவுக்கு ஊழல் இருக்கிறது. திமுக ஒரு குடும்ப ஆட்சி. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேறு யாருமே அந்த கட்சியில் சேர்ந்தால் எந்த பதவியும் கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு மட்டுமே பதவி கிடைக்கக்கூடிய ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இந்த ஆட்சி மீது கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் விஜயகாந்தின் கட்சி சேர்ந்திருப்பது அவர்களது முடிவு தான். தோற்கும் கட்சியோடு சேர்ந்து அவர்களுடம் தோற்க போகிறார்கள். திருமாவளவனுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான கூட்டணி அழைப்பும் நாங்கள் விடுவிக்கவில்லை.
முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி யார் என்று விஜய் அறிவித்துவிட்டார். மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி ஆளும் கட்சியாக இருக்கிற கட்சிகளை எதிரியாக இவ்வளவு துணிச்சலோடு அறிவித்திருக்கிறார். ஒன்றியத்தில் இருக்கும் ஆளும் கட்சி அழுத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், மதவாத கட்சியோடு கூட்டணி இல்லை என்று தலைவர் சொல்லிவிட்டார். சிபிஐ விசாரணையும் சரி, பட பிரச்சனையும் சரி இப்போது தான் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறர்கள். இவ்வளவு அழுத்தங்களுக்கு பிறகும் மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/tvkarun-2026-02-20-20-32-31.jpg)