புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே  காலை 11.25 மணி அளவில் விஜய்  பேசினார். இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, விரைவு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

Advertisment

அதோடு கூட்டம் நடைபெற்ற உப்பளம் மைதானத்திற்குள் வருபவர்களை மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டனர். அதன் பின்னர் க்யூ.ஆர். கோடு இல்லாமல் த.வெ.க தொண்டர்கள் சிலர் பொதுக் கூட்டம் நடைபெறும் கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசுகையில், “ரொம்ப சந்தோஷம். நாம் அனைவரும் விஜய்யின் குடும்பம். தலைவரின் முகம், தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்படும் உண்மையான குடும்பம் இது தான். விஜய்க்காக மட்டும் தான் இவ்வளவு பேர் வந்துள்ளனர். 

Advertisment

விஜய் 2026இல் தமிழகத்தின் முதலமைச்சராக கண்டிப்பாக வருவார். புதுச்சேரியிலும் த.வெ.க.வின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். காவல்துறையினருக்கு நன்றி. விஜய்க்கு எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் இங்குள்ளவர்கள் விஜய்யை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறீர்கள் 3, 4 மாதங்களில் உழைத்தால் புதுச்சேரியில் ஆட்சியில் இருப்போம்” எனப் பேசினார்.