மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் தமிழர்களிடையே, இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதோர் இடையே கலவரத்தை தூண்ட முயலும் பா.ஜ.க. - ஆர்.எஸ். எஸ் மதவாத கும்பலின் மோதல் அரசியல் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என்று முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சே. கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
இவ்வளவு காலம் பின்பற்றாத ஒரு நடைமுறையை சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பதும் எந்த ஒரு சட்ட நீதிகளையும் பின் பற்றாமல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவசர ஆணைகள் பிறப்பித்து, உடனே தர்கா அருகில் தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளை இடுகிறார். இது என்ன சட்டநெறிமுறை என்று விளங்கவில்லை. சட்டமும் நீதியும் மக்களுக்கானது. அது மதத்திற்கானது அல்ல.
ஆனால், இந்த சூழ்ச்சியெல்லாம் அறிந்து உடனடி நடவடிக்கையாக, இந்து – இஸ்லாமியரிடையே கலவரம் வரக் கூடாது என்ற நோக்கத்தில், தர்கா அருகே தீபம் ஏற்றத் தடை போட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடன் வேறு வழியில்லாமல் இவ்வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (09.12.2025) ஒத்தி வைத்துள்ளார் ஜி.ஆர். சுவாமிநாதன்.எப்படியிருந்தாலும், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.
வரலாற்று உண்மைகளை மூடி மறைக்கும் இந்த சங்பரிவாரக் கும்பலுக்கு சில உண்மைகளை உணர்த்த வேண்டியிருக்கிறது. அதாவது, மதுரை, திருப்பரங்குன்ற மலை அடிவாரத்தில் தமிழ்க்கடவுள் முருகனின் - முதல் படை வீடு - உள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி (Great Trigonometrical Survey of India) நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை (Survey Stone / Marker Stone) நட்டு வைத்தார்கள். அதுதான் அந்தக் கல்!
உச்சிப் பிள்ளையார் கோயில் மேலே செல்லும் வழியின் இடது புறத்தில் மலையில் தனியாக சிக்கந்தர் தர்கா (Sikkandar Dargah) உள்ளது. இது இஸ்லாமிய புனிதத் தலமாகும். இ
நடுத்தரத்தில் உள்ள பழமையான தீபத்தூண் இன்னமும் அப்படியே உள்ளது. பிரிட்டிஷ் அளவைக் கல் தனியாக உள்ளது. வேண்டுமென்றே தர்கா அருகில் உள்ள ஆங்கிலேயர் வைத்த மலை குறியீட்டுக் கல்லை தீபம் ஏற்றும் கல்லாக சித்தரித்து கலவரம் செய்கிறார்கள். இது இஸ்லாமியரை குறிவைக்கும் பா.ஜ.க.வின் மதவாத நுண் அரசியல் ஆகும். சங்பரிவாரத்தைச் சேர்ந்த சிலர், “தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் காட்டுவது தீபத்தூண் அல்ல – பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று தவறாகக் காட்டுகிறார்கள்.
இந்த அளவைக் கல் தர்காவுக்கு மிக அருகில் உள்ளது. அதாவது, தர்கா பகுதியிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதுதான் இவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்!
ஆனால் தர்கா பகுதியில் உள்ள அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை. அதை அரசு அனுமதிக்கவும் இல்லை என்று சங்கிகளின் கலவரம் திட்டமிட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டது.இதுநாள் வரை எங்கு ஏற்றப்பட்டதோ அங்குதானே.. ஏற்றவேண்டும். ஆனால் சங்கிகளின் பேச்சு நடமுறையில் இல்லாத ஒன்று.
முருகன் மலையில் சென்று , முருகனுக்கு ஆரோகரா என முழங்காமல், பாரத மாத்தா கீ ஜே” என்று கத்தும் போதே இவர்களுடையே சுய ரூபம் என்ன வென்று புரிந்து கொள்ளலாம்!இந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ்மக்கள் எப்போதும் அடி பணிய மாட்டார்கள். இவ்வாறான ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்லாமியர் பகை அரசியல் எதிர்ப்பைக் காட்டும் பா.ஜ.க.வின் மதவாதபோக்கு தமிழ்நாட்டு மக்கள் கிழித்து தொங்கவிட்டுக்கொண்டே இருப்பர்கள் என்பதுதான் உண்மை!!
Follow Us