பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செய்லாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணி இருக்கிறது என்பது உங்களுக்கு (ஊடகத்தினர்) தெரியும்.
ஜெயலலிதாவின் தீவிர தொண்டரும், எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து அதிமுக இயக்கத்திலே தொண்டாற்றிக் கொண்டிருக்கின்ற மூத்த நிர்வாகியுமாகிய அண்ணன் செங்கோட்டையன் இன்றைக்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் குருபூஜையில் இங்கே கலந்து கொண்டிருப்பது ஜெயலலிதா ஆளுங்கட்சியாக இருக்க போதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த போதும் தொடர்ந்து இங்கு வரும் போது, அவர்களுக்கு முன்பாக இங்கே வந்து ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் இவர்கள் எல்லாம் முகாமிட்டு ஜெயலலிதா இங்கே வந்து செல்வதிலே பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் ஆவர்.
இன்றைக்கு ஜெயலலிதாவின் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு நாங்கள் அனைவரும் இன்றைக்கு முத்துராமலிங்க தேவர் குருபூஜை நாளிலே அவரும் எங்களோடு கொங்கு நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார். துரோகத்தை வீழ்த்துவதற்கு மீண்டும் தமிழ்நாட்டிலே எம்.ஜி.ஆரின் பொற்காலான ஆட்சியையும், ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்ற்னைக்கின்ற முயற்சியாக இன்றைக்கு செங்கோட்டையனும், ஓபிஎஸ்.ஸும் எங்களோடு கரம் கோர்த்துத் தேர்தலிலே நாங்கள் எங்கள் பணியை ஆற்ற இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/ops-ttv-kas-pm-2025-10-30-15-17-31.jpg)