அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் இன்று (07.12.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதாவின் இயக்கம். எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம், ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் இணைய வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போதே முயற்சி செய்தார்கள். 

Advertisment

அதுபோல இப்போதும் முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் போது அவர்களே எப்படிப் பேசி தீர்க்க முடியும்?. இன்னொரு மத்தியஸ்தர் தேவை என்கிற முறையிலே இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டணிக்காக எல்லோரும் ஒற்றுமையில் இருக்க வேண்டும் என்று பேசுவதை நான் தவறாக நினைக்கவில்லை. இதனைத் தலையிடுவதாக நான் நினைக்கவில்லை. மிரட்டுவதாக நினைக்கவில்லை. அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக எல்லாம் சில பேர் சொல்கிறார்கள்.

Advertisment

இவ்வாறு சொல்வதை ஊடகத்தில் நடைபெறும் விவாதத்தில் கூட பார்க்கிறோம். யாராவது ஒருவரை நட்பு ரீதியாக டெல்லிக்கு அழைத்து அவர் அங்குச் சென்று வந்தால் கூட அவரை மிரட்டியே கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும் போது அதை அதில் கூட்டணியாக அந்த கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களைக் கூப்பிட்டுப் பேசி சரி செய்ய முயல்வது மிரட்டுவதோ என்பது கிடையாது” எனப் பேசினார்.