திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து திமுகவைச் சேர்ந்தவர்கள் பேசுவதும், அதற்கு பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் பதில் சொல்வதை நாம் பார்க்கிறோம். இன்னும் சில பேர் சிர்ப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அது நடத்துவோம் என்று சொல்கிறார்கள். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று அரசு கேட்பதை மத்திய அரசு செய்ய வேண்டும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் இதை செய்வோம் என்று சொல்வது காழ்புணர்ச்சியோடு செய்வது போல் இருக்கிறது.

Advertisment

எங்கள் கூட்டணி அமைந்தவுடன் உங்களுக்கு நான் சொல்கிறேன். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்பது தான் நமக்கு நம்பகத்தனமான தகவல் வந்தது. அதன்படி, அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதற்கு வாழ்த்து சொல்கிறோம். அதற்கும், தமிழ்நாட்டில் கூட்டணி அமைவதற்கும் என்ன சம்மந்தம் இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. கூட்டணிக்கு வர வேண்டும் என்று சில கட்சிகள் எங்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகு சொல்வது தான் நாகரிகமாக இருக்கும்.

Advertisment

திமுகவினருக்கு, தவெக என்றாலே ஏதோ ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பது மட்டும் அவர்களது பேச்சில் இருந்து தெரிகிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் இந்த முறை இடம் பெறுகிற கூட்டணி உறுதியாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பது தான் எங்கள் கருத்து” என்று கூறினார்.