அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை நேற்று (17-01-26) கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, உங்கள் புகைப்படத்தை பிரதமர் வருகைக்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் இடம்பெற்றுள்ளது நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த பேனரை யாரோ ஒருவர் ஆர்வத்தில் வைத்திருக்கிறார். ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தாலும் எங்களுக்கும் சில சொந்த வேலைகள் எல்லாம் இருக்கிறது. அதன்படி நான் பல ஊருக்குச் சென்று வருகிறேன். டெல்லிக்கே சென்றாலும் அரசியல் ரீதியாக செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. எத்தனையோ சொந்த வேலைகள் இருக்கும்.
எனக்கு எந்த தயக்கமோ, எந்த குழப்பமோ, எந்த அழுத்தமோ கிடையாது. எங்களை விடுங்கள் நாங்களே முடிவெடுக்கிறோம். நாங்கள் ஒரு சின்ன கட்சி, நாங்கள் ஒன்னும் பெரிய சாதித்த கட்சி கிடையாது. எங்களுக்கு அழுத்தமே நீங்கள் கொடுக்கிறது தான். அதனால், உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை உரியவர்கள் அறிவிப்பார்கள். 2026இல் கூட்டணி ஆட்சி தாம் வரும். நாங்கள் இடம்பெறப்போகின்ற கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். இன்றைக்கு சில உள்ளங்கள் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ்நாட்டில் வர வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள்.
எனக்கு சில மனசாட்சி இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் நலன் எங்களுக்கு முக்கியம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது. நாங்கள் ஒரு சின்ன கட்சி தான். ஆனால், நாங்கள் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். கூட்டணியை நான் தலைமை தாங்கவில்லை, நான் வேறு ஒரு கூட்டணியில் தான் சேரப் போகிறேன். அதனால், உரிய நேரத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் உரிய முறையில் அறிவிப்பார்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/18/tt-2026-01-18-07-46-12.jpg)