தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “(த.வெ.க. தலைவர் விஜய்) எம்.ஜி.ஆர். படத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர். கட்சியின் ஆட்சி ஊழல் ஆட்சி என சினிமாவில் டபுள் ரோல் பண்ற மாதிரி டயலாக் பேசுகிறார். அதிமுகவினர் அண்ணாவை மறந்துவிட்டார்கள் எனப் பேசுகிறார். அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம் அதிமுக. இன்றைக்கும் ஆண்டிப்பட்டி பக்கம் போனால் இன்னும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் எல்லா இடத்திலும் இருக்கும்.
அவருடைய (எம்.ஜி.ஆர்.) தொண்டர்கள் நாங்கள். இன்னும் சொல்லப்போனால் நாங்கல்லாம் அண்ணாவை பார்த்ததில்லை. அண்ணா மறைந்த போது எனக்கு இரண்டு வயதாக இருந்திருக்கும். எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள், ஜெயலலிதாவால் ஆளாக்கப்பட்டவர்கள் எப்படி அண்ணாவை மறப்போம். எங்கள் வழிகாட்டிகளை யாரும் மறப்பார்கள். சும்மா டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கிறார். அவர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என் ஆசைப்பட்டால் அதற்கான பணியை செய்ய வேண்டும். ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள். நீங்கள் உங்கள் படத்தை பிளாக் டிக்கெட் வித்துக் கொண்டுத் தானே இருக்கிறீர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/tvk-vijay-mic-1-2026-01-26-23-46-07.jpg)
உங்களால் அந்த ஊழலையே ஒழிக்க முடியவில்லை. ரூ. 100, 150 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விறபதை கூட உங்களால் ஒழிக்க முடியவில்லை. அவர் எப்படி ஊழலை ஒழிப்பார்?. முதலில் வெளியில் வாருங்கள்” எனப் பேசினார். முன்னதாக, “வரும் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. என் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற்று அமைச்சராவதே எனது ஆசை. தங்களுக்குள் இருந்தது குடும்ப சண்டை மட்டுமே. நாங்கள் ஜெயலலிதா வளர்ப்பில் வந்தவர்கள். நாங்கள் அனைவரும் அன்றே ஒன்று சேர்ந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow Us