அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. இந்த சூழ்நிலையில், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதில், இந்தியப் பொருட்களுக்கு 27% இறக்குமதி பரஸ்பர வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% பரஸ்பர வரியையும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரியும், ஜப்பான் பொருட்களுக்கு 22% இறக்குமதி வரியும் விதிக்கப்படுவதாகத் பாகிஸ்தான் 29%, வியட்நாம் 46%, வங்கதேசம் 37% என இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 84% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா அறிவித்தது. உடனடியாக சீனாவுக்கு பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு 125% வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. உத்தரவிட்டார். வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், இந்தியா மீது 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதன்படி, ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துள்ள நாடுகளுக்கு அதிக வரி விதித்து ரஷ்யாவுடனான அந்த நாடுகளின் வர்த்தக உறவை முறிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றத்திம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரும் ஜூலை 9ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக விளக்கமளித்த டொனால்ட் டிரம்ப், “இந்தியாவுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். அதன்படி, நாம் இந்தியாவிற்குள் சென்று அங்கு போட்டி போட முடியும். இதுவரை, இந்தியா தன் நாட்டிற்குள் வேறு யாரையும் வர அனுமதித்ததில்லை. ஆனால், இந்தியா அதை செய்யப் போகிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதைச் செய்தால், மிகக் குறைந்த வரி விதிக்கும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வோம்” என்று கூறினார்.