Trump warns Iran
தொடர்ச்சியாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்சமயத்தில் இதனை கண் கூடாகவே பார்க்கமுடிகிறது. குறிப்பாக, அணு சக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இந்த பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இப்போது, இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் நீட்சியாக, சமீபத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல் ஈரானுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த போர் நடைபெறாமல் போனது.
இதையடுத்து, ஈரானும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஒப்பந்தம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை என்றால், அது ஈரானுக்கு மிக மோசமான நாளாக அமையும். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் பேசிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போதே நாம் நிறைய உயிர்களை இழந்துவிட்டோம். அதனால், நாங்கள் விரைவில் விமானம் தாங்கிய போர்க்கப்பலை அனுப்ப இருக்கிறோம்.
நாம் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள முடியுமா? என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அது கடினமாக இருக்கிறது. கடந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் உலகம் முழுவதும் அமைதியைக் கொண்டு வர நினைக்கின்றோம். கடந்த பத்து மாதங்களில் எட்டு போர்களை நிறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us