இந்தியாவின் வர்த்தகம் மற்றும் எரிசக்தி சார்ந்த முடிவுகள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் அமையவில்லை என்றால், இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா மிக விரைவில் உயர்த்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Advertisment

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் எங்களுடன் வர்த்தகம் செய்கிறார்கள். நாங்கள் நினைத்தால் அவர்கள் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும்” என்று  கூறினார். பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய அதே வேளையில், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்த இந்தியாவின் அணுகுமுறையை தனது தனிப்பட்ட அதிருப்தியுடன் நேரடியாக சாடும் வகையில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தியா, அமெரிக்காவுடன் எண்ணெய் வாங்கிவரும் அதே வேளையில் ரஷ்யாவுடனும் எண்ணெய்யை வாங்கி வருகிறது. ஆனால் இந்தியா, ரஷ்யாவுடன் அதிக அளவிலான எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. இதற்கு தொடர்ந்து பல முறை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்து வந்தார். இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இதன் விளைவாக கடந்த ஆண்டு இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி அதிகரிப்பு இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரு நாடுகளும் தற்போது ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இருப்பினும் அந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையான தீர்வை எட்டாமல்  இருக்கின்றன. குறிப்பாக 2022-ல் உக்ரைன் போர் வெடித்ததைத் தொடர்ந்து, தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா மாறியது. ஆனால் இந்த கொள்முதல் செய்யும் போக்கு,  அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பல தடைகள் விதித்தன. இதன் காரணமாக இந்தியாவில் ரஷ்ய எண்ணெய்யின் இறக்குமதி வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து,  ஒரு நாளைக்கு சுமார் 1.2 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்தது. இது ஜூன் மாதத்தில் இருந்த அதிகபட்ச கொள்முதல் அளவான ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய்களில் இருந்து தோராயமாக 40% சரிவைக் குறிக்கிறது.

Advertisment

இந்த நிலையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதில் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்கா, இந்தியாவை நேரடியாக எச்சரித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் இந்தியா மீதான வரிகளை உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.