கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நமது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்பி, இந்தியாவில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அயர்லாந்தில் லாபத்தைக் குறைத்து, அமெரிக்க சுதந்திரத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் அந்த நிறுவனங்கள், தங்கள் சக குடிமக்களை வீட்டிலேயே பணிநீக்கம் செய்து தணிமைப்படுத்துகிறார்கள். அதிபர் டிரம்பின் கீழ், அந்த நாட்கள் முடிந்துவிட்டன.
சீனாவில் தொழில்நிறுவனங்களை கட்டுவதை விடவும், இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலைகளை வழங்குவது விடவும் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவிற்கு ஆதரவாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக இருக்க வேண்டும். நீங்கள் அமெரிக்காவை முதன்மைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நாங்கள் கேட்பது அவ்வளவுதான்” என்று கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, தற்போது கூகுல் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப பணியிடங்களுக்குஇந்தியாவில் இருந்து பணியமர்த்தவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.