ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.
ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டிலும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், உறுப்பு நாடுகளின் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்ப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “தென்னாப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. டச்சு குடியேறிகளின் வம்சாவளியினர், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் குடியேறியவர்களான ஆப்பிரிக்கர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், மேலும் அவர்களின் நிலங்களும் பண்ணைகளும் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை எந்த அமெரிக்க அரசாங்க அதிகாரியும் கலந்து கொள்ள மாட்டார்கள். 2026 ஜி20 மாநாட்டை புளோரிடாவின் மியாமியில் நடத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/tru-2025-11-08-19-31-57.jpg)