அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக நீண்டகாலமாக ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் குறித்த விவாதங்கள் உலக அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நாசா ஆகியவை சேகரித்ததாகக் கூறப்படும் அடையாளம் கண்டறியப்படாத வான்வெளி பொருட்கள் மற்றும் ஏலியன்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக ரகசிய பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து  மக்களிடையே பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், அமெரிக்க வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி பொருட்கள் குறித்த ரகசிய கோப்புகளை மக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து, ட்ரம்ப் கூறுகையில், “மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் குறித்த அனைத்து அரசு ஆவணங்களையும் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ஏலியன்கள் இருப்பது உண்மையா? இந்த தகவல்கள் நிச்சயம் வெளியிடப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முன்னதாக, ஏலியன்கள் இருப்பது உண்மை தான் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருந்ததும், இதற்கு ஒபாமா பெரிய தவறிழைத்துவிட்டார் என்று ட்ரம்ப் அவரை விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.