Advertisment

தலைமைத் தேர்தல் ஆணைய குழுவிற்குக் கருப்புக்கொடி காட்டிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்!

wb-cec-iss

தமிழ்நாடு, புதுவை, கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, இந்த ஐந்து மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட சில முக்கிய தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. மேலும், தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்த ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலைச் சிறப்பாக நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு, மேற்குவங்க மாநில தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய நேற்று இரவு (08.03.2026) கொல்கத்தாவிற்குச் சென்றது. இந்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். ஏற்கனவே, எஸ்.ஐ.ஆர். பணியின் போது லட்சக் கணக்கானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. 

Advertisment

மேலும், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். பணியில் முறைகேடு செய்துள்ளதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்பந்தமாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இவ்வாறு தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கும், மேற்குவங்க மாநில அரசிற்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தேர்தல் உயர்மட்ட குழுவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டியுள்ளது மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (09.03.2026) மற்றும் நாளை (10.03.2026) என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trinamool Congress election commission of india Gyanesh Kumar west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe