திருப்பத்தூரில் விவசாய நிலத்தை சீரமைக்க முயன்ற பொழுது சிறிய பானையில் தங்கக் காசுகள் நிறைந்த புதையல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதவன் என்ற விவசாயி தன்னுடைய விவசாய நிலத்தை சீர்படுத்துவதற்கு ஜெசிபி மூலம் தோண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறிய வடிவிலான கலசம் ஒன்று கிடைத்தது. அதில் உள்ளே பார்த்த பொழுது சுமார் 86 க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தது.

Advertisment

இதுபோன்ற புதையல்கள் கிடைக்கும் போது அரசு  தரப்பில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் அவர் அதனை ஒப்படைக்க மறுத்துள்ளார். இந்த தகவல் எப்படியோ கசிந்து பரவிய நிலையில் கிராம நிர்வாக அதிகாரி விசாரணையில் ஈடுபட்டார். புதையல் கிடைத்தது உண்மைதான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து ஆதவனிடம் இருந்து 86 தங்கக் காசுகள் கொண்ட அந்த புதையலை வட்டாட்சியர் நவநீதன் பறிமுதல் செய்தார். அந்தப் பகுதியில் மேலும் இதுபோன்ற தங்கக் காசுகள் நிறைந்த புதையல் கலசங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக வருவாய்த்துறை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.