Transgender women caught up in 'VAO' investigation with disfigured face Photograph: (nagai)
சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்திற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் ஈ.சி.ஆர் கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகம் சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சடலமாகக் கிடந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் (38) என்பதும் திருவாய்மூர் ஊராட்சியில் வி.ஏ.ஓவாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடந்தாண்டு எட்டுக்குடி கிராமத்தில் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது அவர், லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் கடந்த 2024ஆம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், லஞ்சம் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜாராமன் மாலை வரை திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில், மர்மமான முறையில் ராஜாராமன் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் ராஜாராமனுக்கு ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா? அந்த தொடர்பில் இந்த கொலை நடந்திருக்கிறதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலையை நிகழ்த்தியது திருநங்கைகள் என்பது தெரியவந்துள்ளது. சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த இரண்டு திருநங்கைகளிடம் உல்லாசமாக இருக்க ராஜாராமன் சென்றதாகவும் அப்போது பணம், நகைகளை பறித்த திருநங்கைகள் இருவர் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருநங்கைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow Us