கன்னியாகுமரியில் அழுகிய நிலையில் திருநங்கை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஜீரோ பாயிண்ட் பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கோவளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கோவளம் கிராம நிர்வாக அலுவலர் பிரீடா ஏஞ்சலின் அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் திருநங்கை ஒருவரின் சடலம் கிடந்தது. பிரீடா ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கேரளாவைச் சேர்ந்த பதமினி (வயது 54) என தெரியவந்தது. மார்த்தாண்டம் பகுதியில் பதமினி வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/897-2026-02-19-10-34-59.jpg)