திருநங்கை கொடூரக் கொலை; சிதம்பரத்தில் பகீர் சம்பவம்!

103

சிதம்பரம் அருகே பி. முட்லூர் அரசு மதுபான கடை பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் இறந்து கிடப்பதாக பரங்கிப்பேட்டை காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த திருநங்கை உடலை கைபற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த விசாரணையில் கடலூர் அருகே கொடுக்கன்பாளையத்தை சேர்ந்த காவியா (எ) கவியரசன்(40)  திருநங்கை என்றும் இவரை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் குடிபோதையில் முகம் மற்றும் உடல் மீது தாக்கி கொலை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இவருக்கு மனைவி மற்றும் 2  குழந்தைகள் உள்ளது.  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

police Transgender
இதையும் படியுங்கள்
Subscribe