'திருநங்கை கொலை சம்பவம்'- காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

a4550

'Transgender incident' - Superintendent of Police explains Photograph: (cuddalore)

சிதம்பரம் அருகே பி.முட்லூர் அரசு மதுபான கடை பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் இறந்து கிடப்பதாக பரங்கிப்பேட்டை காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த திருநங்கை உடலை கைபற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த விசாரணையில் கடலூர் அருகே கொடுக்கன்பாளையத்தை சேர்ந்த காவியா (எ) கவியரசன்(40)  திருநங்கை என்றும் இவரை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் குடிபோதையில் முகம் மற்றும் உடல் மீது தாக்கி கொலை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இவருக்கு மனைவி மற்றும் 2  குழந்தைகள் உள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் சிதம்பரம் உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் லாமேக் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், 'காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்முருகன் மற்றும் செந்தில்குமார் தலைமையில்  விசாரணை மேற்கொண்டதில் அதே பி.முட்லூர் பகுதியில் உள்ள அம்பாள் நகரைச் சேர்ந்த வசந்த் என்பவரும் திருநங்கை காவியாவும் வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு செல்லும் போது இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் வசந்த் திருநங்கையின் கழுத்தில் காலை வைத்து உதைத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். வசந்தை கைது செய்து போkaliலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Cuddalore police Transgender
இதையும் படியுங்கள்
Subscribe