கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பயறுவகைப் பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடைபெற்றது.

Advertisment

இப்பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் க. நடராஜன் கலந்துகொண்டு பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதை நேர்த்தி செய்யும் முறை, புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், நுண்ணூட்ட கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீர் பரிசோதனை முறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (TNAU) பயிறு ஒன்டர் இலைவழி மூலமாக தெளிக்கும் முறை பற்றிய தொழில் நுட்பங்களை தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

Advertisment

தனுகா நிறுவனம் நிறுவனத்தை சேர்ந்த வேளாண் அறிவியலார் முனியன் பயறு வகை பயிர்களுக்கு ஏற்ற அனைத்து வகையான பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மத்திய அரசால் சிறுகாலூர் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்மை அறிவியல் நிலையம், மூலமாக மாதிரி கிராம பயறுவகை செயல்விளக்கம் செயல்படுத்தப்பட்டது. இப்பயிற்சியில் உளுந்து விதை வம்பன் 8, வம்பன் 10, TNAU பயிறு ஒன்டர், இனக்கவர்ச்சி பொறி, வேப்ப எண்ணெய் கரைசல் உழவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சிறுகாலூர் கிராமம், கீரப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.